Login Form



Invite Friends



Want to invite your friends to Kalvithulir
Click Here

Giveaway of the Day


நூலாடைக் கேட்ட கண்ணன் PDF Print E-mail
Written by Vishalam Raman   
Thursday, 03 March 2011 06:38
பிருந்தாவனத்தில் ஜன்மாஷ்டமி உற்சவம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது .எல்லா
பக்தர்களும் அந்த அழகு கண்ணனுக்குப்  புத்தாடைச் சார்த்தி மனம் மகிழ்ந்தனர்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர் .அவர் மனதில் தானும் அந்தக் கமலக்கண்ணனுக்கு ஒரு பட்டாடை அணுவித்து அழகுப்பார்க்க எண்ணினார் .

 

ஆனால் அன்றாடம் உஞ்சவிருத்தி  எடுத்து உண்ணும் அவருக்கு இது சாத்தியமா என்ன?. தன் மனைவியிடம் போய் இதைத்தெரிவித்தார் .

 

மனைவியோ
"என்ன பேசறேள்? இதெல்லாம் நமக்கு சாத்தியமா? அதான் அந்தக்கிருஷ்ணன்
எல்லா நாளும் புதுப்பட்டு தானே கட்டறான் !அவனுக்கு நாம செய்யலேன்னு
தான் குறையா என்ன?"

 

"அதில்லே.....வந்து எனக்குத்தான் அப்படி ஒரு ஆசை .சரி உங்கிட்ட இருக்கிற
பித்தளைப்பாத்திரத்தைக் கொண்டு வா"

 

கணவன் சொல்லுக்கு மறு பேச்சில்லாமல் அவளும் அதைக்கொடுக்க
அதை விற்க கடைவீதிக்கு எடுத்துச்சென்றார் .கொஞ்சம் பணம் கிடைத்தது ,
அதில் ஒரு நூலாடைத்தான் வாங்க முடிந்தது . அதை எடுத்தக்கொண்டு நேரே
கண்ணன் கோயிலுக்குச்சென்றார் அவர் .

 

சரி  ..யார் அந்த அவர்?  ஒரு காலத்தில் மதுரா நகர அரசவையில்  மன்னரின்
முதலமைச்சராகப் பணியாற்றின  "திரிபுரதாசர் " என்பவர் தான் அந்த "அவர்"
அவரிடம் இருந்த அத்தனைச்செல்வமும் என்னவாயிற்று?
அவர் ஒரு சமயம் க்ஷேத்ராடனம் போன போது தனது சொத்துக்களை ஏழை எளியவருக்குத் தானம்செய்து  பிருந்தாவனத்தின் அழகைக்கண்டு அங்கேயே தங்கி தினமும் கண்ணனின் தரிசனத்தால் பேரானந்தம்  அடைந்தார் .

 

நாம சங்கீர்த்தனமே வாழவை உய்விக்கும் வழி என உணர்ந்து தினமும் உஞ்சவர்த்தி எடுத்து தன் இலக்கையை அடைய முயன்றார் .

 

கோயிலில் நுழைந்த திரிபுரதாசர் ஆசையுடன் தான் வாங்கிவந்த நூலாடையை
எடுத்தார்  .......  சாயங்கால ஆர்த்தி நடந்துக்கொண்டிருந்தது அர்ச்சகரிடம்
அந்த ஆடையை நீட்டினார் .அர்ச்சகரும் அதை வாங்கிக்கொண்டார் .ஆனால்
அவர் முகம் சுருங்கியது .
"

 

என்ன இது ? அந்த ஓரத்லே பாருங்கோ எத்தன பட்டுத்துணி குமிஞ்சுகிடக்கு!
அத போடவே நேரமில்ல . இந்த  வேஷ்டிய சமர்பிக்கவா ஓடி வந்தேள்!
இத நீங்களே வச்சுங்கோ இத எடுத்துண்டு போங்கோ"
"

 

நான் ஆசையா வாங்கி இருக்கேன் .கண்ணன்மேலே சார்த்தி அழகுப் பார்க்கணும்
நீங்களே இத வச்சுங்கோ ' என்று சொல்லியபடியே பிரகாரத்தை வலம் வரச்சென்றார்.

 

அர்ச்சகர் ஏளனமாக இவரைப்பார்த்தபடி அந்த நூல் வேஷ்டியைக்கீழே போட்டுவிட்டு அதன் மேல் தன் கால்களை நீட்டியபடியே 
அமர்ந்தார் .

 

இரவு கால பூஜை  தொடங்கியது  பன்னீர் அபிஷேகம் பின் பாலாபிஷேகம் எனத் தொடங்கியவுடன்  மூலமூர்த்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

 

பல அர்ச்சகர்கள் பல பட்டுத்துணிகளைப் போர்த்தினார்
கள் என்ன செய்தாலும்
நடுக்கம் இருந்தபடியே இருந்தது வாசனைத்தூபம் போட்டனர் .நடுக்கம் போகவில்லை ,தீபாராதனைக்காட்டினர் நடுக்கம் குறையவில்லை

 

என்ன செய்ய ?பக்தர்கள் மனதில் பீதி உண்டாயிற்று .என்ன தெய்வ குத்தமோ
தெரியவில்லை. என்ன ஆகுமோ ?என்று மனம் கலங்கினர்.அந்த நேரம் ஒரு அர்ச்சகருக்கு அருள் வந்து பேசத்தொடங்கினார்
"

 

எங்கே என் பக்தன் அளித்த நூலாடை ? என் பக்தன் திரிபுரதாசன் அளித்த
உடையை எனக்கு அணிவித்தால் தான் என் நடுக்கம் நிற்கும். கொண்டு வாருங்கள் அதை"

 

அந்த  ஒரு அர்ச்சகர்  திரிபுரதாசனின் நூலைடையைக் கீழே போட்டு அதன் காலை நீட்டி அமர்ந்த  அர்ச்சகர் தான் ,

 

உடனே ஓடிச்சென்று  கண்கலங்க பக்தியுடன் பணிவுடன் அதை  கண்ணன் மேல்
சார்த்தி  மன்னிப்பு கேட்டார் .

 

கோயிலைச்சுற்றி வந்தப்பின் பிரகாரத்தில் அமர்ந்த திரிபுரதாசரை கண்ணன்
ஒரு உலுக்கு உலுக்கினான் ,கண் திறந்துப்பார்த்தார் திரிபுரதாசர்.பின் நேராக சன்னிதானம் போய் பார்க்கையிலே அவர் தன்னிலையிலேயே இல்லை.

 

"அப்பா பரந்தாமா .உன் கருணையே கருணை இந்த எளியவன் கொடுத்து நூல
வேஷ்டியையும் அணிந்துக்கொண்டாயே  . கருணைக்கடலே . "என கண்கள் நீர்
வழிய   உள்ளம் சிலிர்க்க சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினார் .

 

எழுந்து நின்றவுடன் அவர் காலில் அர்ச்சகர் தடாலென்று விழுந்து
"ஸ்வாமி என்ன மன்னிச்சுங்கோ  " என்று குரல் தழதழக்கக் கூறினார்.
கோயிலில் இருந்த  கண்ணன் புன்முறுவல் செய்தான்.
Last Updated on Thursday, 03 March 2011 06:49